FAQ

The Frequently Asked Questions

Is JNews have video documentation?

As a JNews Customer you will be granted an exclusive access to Video Documentation right from your backend. Watching video is always a pleasant thing. We believe you will love this service, since you donít need to back and forth read long documentation pages. Instead, you can save your time working with your articles & contents.

பிட்காயினைப் பற்றிய FAQ:

1) பிட்காயினுக்கு உருவம் உண்டா?

கிடையாது. யாராவது அச்சடிக்கப்பட்ட தாள்கள் அல்லது வில்லைகளைக் காட்டி இதுதான் பிட்காயின் என்றால் நம்பாதீர்கள். பிட்காயின் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டலால் ஆனது.

2) பிட்காயினைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய முடியுமா?

அமெரிக்காவில் விமான டிக்கெட் முதல் பீட்ஸா வரை எதை வேண்டுமென்றாலும் பிட்காயின் கொடுத்து வாங்க முடியும். இந்தியாவிலும் சில இணையதளங்கள் இப்போது பிட்காயினை ஏற்கின்றன.

3) ஒரு பிட்காயினே 3 லட்சம் என்றால், அதற்குக் குறைவாகப் பணம் இருப்பவர்கள் வாங்க முடியாதா?

வாங்கலாம். பைசாவைப் போல பிட்காயினிலும் சில்லறை உண்டு. 10 பிட்டிஷ், 20 பிட்டீஷ் என வாங்கலாம்.

4) பிட்காயின் தடை செய்யப்பட்ட நாடுகள் எவை?

பங்களாதேஷ், பொலிவியா, ஈகுவேடார் மேலும் சில நாடுகள். சீனா சமீபத்தில் தடை விதிக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தத் தடை உள்நாட்டு எக்ஸேஞ்சில் பிட்காயினை மாற்றுவதற்கு மட்டுமே. டிஜிட்டலாக தடை என இதுவரை சொல்லவில்லை.

5) இப்போது உலக அளவில் இருக்கும் பிட்காயினின் மொத்த மதிப்பு எவ்வளவு?

17 லட்சம் கோடி. பிட்காயினின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே போவதால் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயரும்.

6) நான் எப்படி பிட்காயினை வாங்க முடியும்?

அ) ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாக வாங்கலாம்
ஆ) எக்ஸேஞ்சில் பிட்காயினை வாங்கலாம்
இ) பிட்காயின் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து வாங்கலாம்.
ஈ) மைனிங் செய்யத் தெரிந்தால் செய்யலாம் அல்லது செய்யத் தெரிந்தவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து வாங்கலாம்.

7) எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பில்லாமல் போகுமா?

சாத்தியங்கள் உண்டு. எந்த ஒரு கரன்ஸிக்கும் இந்த நிலை வரலாம். ஆனால், பிட்காயின்என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாலும், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதாலும் அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.

Get Started Now.

To Buy and Sell CryptoCurrency